தடுப்பூசி தடையை நீக்கக்கோரி அமெரிக்கா வேண்டுகோள்: அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக கவலை
அமெரிக்காவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்காவிட்டால் அரசுக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படும் என அமெரிக்காவின் பட்ஜெட் துறை மேலாளர் ஜேசன் மில்லர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் அல்லது வாரம் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பரில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிட்டன் வெளியிட்ட அறிவிப்பில் அணைத்து அரசு ஊழியர்களும் நவம்பர் 22க்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும், அவ்வாறு தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ஊழியர்கள் மீது துறை ரிதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 21ல் டெக்சாஸ் நீதிபதி அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள தடுப்பூசி தொடர்பான அறிவிப்பிற்க்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இது தொடர்பான மேல்முறையீடு வழக்கில் 5th circuit நீதிமன்றத்திற்கு மார்ச் 6 தேதி வரையுள்ள நிலையில் அமெரிக்காவின் பட்ஜெட் துறை மேலாளர் ஜேசன் மில்லர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அமெரிக்காவில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் முழுமையான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர், ஆனால் இன்னும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.
இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு மட்டும் மாதம் 11 மில்லியன் முதல் 22 மில்லியன் அமெரிக்கா டொலர் வரை செலவு செய்யப்படுகிறது.
ஒரு காலாண்டில் என்று பார்த்தால் 33 மில்லியன் முதல் 65 மில்லியன் அமெரிக்கா டொலர் வரை செலவு செய்யப்படுகிறது.
இது அரசின் நீதித்துறையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது, மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்களால் பிற ஊழியர்களின் பாதுகாப்பும் கவலைக்குள்ளாகிறது.
இதனால் நீதித்துறை இந்த நடைமுறைகளை எல்லாம் ஆராய்ந்து இந்த தடையை உடனடியாக நீக்குமாறு அமெரிக்காவின் பட்ஜெட் துறை மேலாளர் ஜேசன் மில்லர் கோரிக்கை விடுத்துள்ளார்.