ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ட்ரம்ப்... அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய நிர்வாகம் உடனடியாக வர்த்தக வரிகளை விதிக்காது என்ற செய்தியைத் தொடர்ந்து டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
முதல் நாளில் புதிய வரி
ஆனால் அமெரிக்க வர்த்தக கூட்டாளிகள் சில நாடுகளின் நாணயங்களில் ஏற்றத்தையும் பதிவு செய்துள்ளது. டொனால்டு ட்ரம்பின் புதிய அரசாங்க அதிகாரிகள் சிலர் தெரிவிக்கையில்,
ட்ரம்ப் திங்கட்கிழமை ஒரு விரிவான வர்த்தக குறிப்பாணையை வெளியிடுவார் என்றும், இதனால் முதல் நாளில் புதிய வரிகளை விதிப்பது தவிர்க்கபப்ட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, தனது பதவியேற்பு உரையில் குறிப்பிட்ட வரி விதிப்பு திட்டங்கள் எதையும் ட்ரம்ப் குறிப்பிடவில்லை, ஆனால் வருவாய் சேவை ஒன்றை உருவாக்கும் தனது நோக்கத்தை அவர் மீண்டும் உறுதி செய்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து பெருமளவிலான வரிகள், கட்டணங்கள் மற்றும் பிற வருவாய்களை வசூலிக்க ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதே ட்ரம்பின் திட்டமாக உள்ளது. நாட்டின் 47வது ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப், தனது அரை மணி நேர உரையில், உடனடியாக எடுக்கவுள்ள நிர்வாக நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.
பணவீக்கத்தை அதிகரிக்கும்
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்து அங்கு துருப்புக்களை அனுப்புவது உட்பட ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ட்ரம்ப் நிர்வாக உத்தரவுகள் மூலம் வர்த்தக கட்டணங்களை அறிவிப்பார் என்று சந்தை பங்கேற்பாளர்கள் எதிர்பார்த்தனர்.
அத்தகைய நடவடிக்கையானது பணவீக்கத்தை அதிகரித்து, நீண்ட காலத்திற்கு பெடரல் ரிசர்வ் கொள்கை விகிதங்களை உயர்த்தியிருக்கும். இந்த நிலையில், அமெரிக்க நாணயத்தை மற்ற ஆறு நாணயங்களுக்கு எதிராக அளவிடும் டொலர் குறியீடு 1.3 சதவிகிதம் வரை சரிந்து கடைசியாக 1 சதவிகிதம் குறைந்து 108.26 என பதிவானது.
நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, ட்ரம்பின் கொள்கைகள் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்ப்பதால், டொலரின் பெறுமதி 4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. யூரோ பெறுமதி 1.2 சதவிகிதம் உயர்ந்து 1.0394 டொலராக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |