”அமெரிக்கா நரகத்திற்கு செல்கிறது” ஆதரவாளர்கள் மத்தியில்...கைதான முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் உரை
அமெரிக்காவில் இது போன்று எதுவும் நடக்கும் என்று நினைக்கவில்லை என்று கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் கைது
ஆபாச நடிகை ஒருவருடனான உறவை மூடிமறைக்க, சம்பந்தப்பட்ட நடிகைக்கு டிரம்ப் பெருந்தொகை அளித்தது மற்றும் 34 பொய்யான வணிகப் பதிவுகள் வைத்தது ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் விசாரணைக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான நிலையில், அங்கு அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார்.
Twitter
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் டிரம்ப்-க்கு கைவிலங்குகள் இடப்படவில்லை, ஆனால் மாறாக குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரை
இந்நிலையில், இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் எதிர்கொள்ளாத கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது புளோரிடா தோட்டத்தில் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் முன் உரையாற்றினார்.
அதில், 76 வயதான டிரம்ப், ”அமெரிக்காவில் இதுபோன்று எதுவும் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
DONALD TRUMP: “The only crime that I've committed is to fearlessly defend our nation from those who seek to destroy it.”
— ALX ?? (@alx) April 5, 2023
pic.twitter.com/gAOTgvABuS
அத்துடன் “நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து அச்சமின்றி நாட்டை பாதுகாப்பது தான்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “அமெரிக்கா நகரத்திற்கு போகிறது” எனக்கு பெரிய ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட, இப்படி நடந்து இருக்க கூடாது என கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
தான் இப்போது எதிர்கொள்வது ”தேர்தல் குறுக்கீடு”,வரவிறுக்கும் 2024 தேர்தலில் குறுக்கீடுகளை ஏற்படுத்தவே இந்த போலி வழக்குகள் தன் மீது சுமத்தப்பட்டுள்ளது, இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Reuters