ரஷ்ய எண்ணெய் தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள முடிவு., இந்தியாவிற்கு பாதிப்பு
அமெரிக்கா, ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்ட தடைகளில் சில நாடுகளுக்கு வழங்கப்பட்ட சலுகையை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான முக்கிய காரணம், ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்ட குழப்பம்.
ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சலுகை வழங்காமல், முழுமையான தடையை அமுல்படுத்த என அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
இதனால் இந்தியா போன்ற நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்தியா, கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் குறைந்த விலையில், எண்ணெய் வாங்கி வந்தது. அமெரிக்காவின் சலுகை முடிவடைந்தால், இந்தியா தனது எரிசக்தி இறக்குமதி செலவுகளை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகும்.
அமெரிக்க அதிகாரிகள், "ரஷ்ய எண்ணெய் விற்பனை, அதன் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க உதவுகிறது. அதனால், சலுகைகளை நீக்குவது அவசியம்" என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு ஏற்படவுள்ள தாக்கம்
- எண்ணெய் விலை உயர்வு
- இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு
- உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வு
- பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
இந்நிலையில், இந்திய அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து கூடுத;ல் எண்ணெய் வாங்கும் வாய்ப்புகள் பரிசீலனையில் உள்ளன.
இந்த முடிவு உலகளாவிய எரிசக்தி சந்தையில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தும். இந்தியா பொன்னர் வளர்ந்து வரும் நாடுகள் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.