ட்ரம்பின் வரி விதிப்பு சுவிட்சர்லாந்தை பாதிக்குமா? வர்த்தகர்கள் கவலை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஐரோப்பா மீதும் வரிகள் விதிப்பதாகக் கூறியுள்ள விடயம், ஐரோப்பிய ஒன்றிய நாடாக இல்லாத சுவிட்சர்லாந்திலும் எதிரொலித்துள்ளது.
ட்ரம்பின் வரி விதிப்பு சுவிட்சர்லாந்தை பாதிக்குமா?
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவிகித வரிகள் விதிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஐரோப்பா மீதும் வரிகள் விதிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு இல்லை. என்றாலும், ட்ரம்ப் ஐரோப்பா மீதும் வரிகள் விதிப்பாரானால், அது சுவிட்சர்லாந்தையும் பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.
சுவிஸ் தொழில்துறை கூட்டமைப்பான Swissmem என்னும் அமைப்பின் தலைவரான மார்ட்டின் ஹிர்செல் (Martin Hirzel), ஐரோப்பா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு சுவிட்சர்லாந்தைக் கடுமையாக பாதிக்கக்கூடும் என்கிறார்.
அதாவது, சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்துவருகிறது.
ஆகவே, சுவிட்சர்லாந்தின் மீது வரிகள் விதிக்கப்படவில்லை என்றால் கூட அது ஏற்றுமதியை பாதிக்கலாம் என்கிறது Swissmem அமைப்பு.
அத்துடன், சுவிட்சர்லாந்தின்மீது ஐரோப்பிய ஒன்றியம் வரிகள் விதிக்குமானால், அது சுவிட்சர்லாந்தை மூன்றாவது நாடாக கருதக்கூடும்.
அப்படி ஐரோப்பிய ஒன்றியம் சுவிட்சர்லாந்தை மூன்றாவது நாடாக கருதுமானால், சுவிஸ் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையும்போது அவற்றின் மீது சுங்க வரிகள் மற்றும் பிற தடைகள் உருவாகலாம் என்பதால் சுவிஸ் தொழில்துறை கவலையடைந்துள்ளது.