ஆப்கானிஸ்தானில் இருந்து 48,000 பேரை வெளியேற்றியது அமெரிக்கா - வெள்ளை மாளிகை ட்வீட்
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 14-ஆம் தேதி முதல் 48,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் இருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. சொந்தநாட்டு மக்கள் மட்டுமின்றி ஐரோப்பிய நாட்டு மக்கள், ஆப்கானிஸ்தான் மக்களையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை வெளியேற்றிய மக்களின் எண்ணிக்கையை அமெரிக்கா இன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்காவின் வெள்ளைமாளிகை இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இன்று ஒரேநாளில் 10,900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில், 15 அமெரிக்க ராணுவ விமானங்களில் 6,600 பேரும், நட்பு நாடுகளின் 34 விமானங்களில் 4,300 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 48,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியுள்ளோம். ஜூலை மாத இறுதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 53,000 மக்களை வெளியேற்றி இடமாற்றம் செய்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Since August 14, the U.S. has evacuated and facilitated the evacuation of approximately 48,000 people. Since the end of July, we have re-located approximately 53,000 people.
— The White House (@WhiteHouse) August 23, 2021