ரஷ்யாவுக்கு பின்னடைவு: தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய அமெரிக்கா
அமெரிக்காவில் உள்ள இரண்டு ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற பிடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ரஷ்ய பிரஜை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி அமெரிக்க தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உள்ளது.
தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாட் மில்லர் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
"எங்கள் தூதர்களை ரஷ்ய அரசாங்கம் துன்புறுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது, மேலும் மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பாக வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே உக்கிரமான விரோதம் நிலவி வரும் நேரத்தில் இராஜதந்திரிகளின் வெளியேற்றங்கள் வந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
US Biden administration, US expelled two Russian diplomats, United States of America, Ukraine Russia War