42 நவீன ரொக்கெட்களுடன் F-15E போர் விமானத்தை சோதனை செய்த அமெரிக்கா
ட்ரோன் தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் அமெரிக்கா அதன் F-15E போர் விமானத்த்தில் 42 ரொக்கெட்களை பொறுத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
2025 மே 22 அன்று, The Merge வெளியிட்ட புகைப்படங்களில், அமெரிக்க வான்படையின் F-15E Strike Eagle போர்விமானம் புதிய வகை ஆயுதங்களை சோதனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதில், 42 APKWS II வகை guided rockets பொருத்தப்பட்டிருந்தன. இது வழக்கமான 6 air-to-air ஏவுகணைகளை விட ஏழு மடங்கு அதிகமான தாக்குதல் வாய்ப்பை வழங்குகிறது.
குறிப்பாக ட்ரோன்கள் மற்றும் கிரூஸ் ஏவுகணைகள் போன்ற குறைந்த வேக ஆபத்துகளை எதிர்கொள்ளும் நிலைகளில் சிறப்பாக செயல்படும்.
APKWS II (Advanced Precision Kill Weapon System) என்பது 70mm ஹைட்ரா ரொக்கெட்டுகளை துல்லியமாக வழிநடத்தக்கூடிய ஆயுதங்களாக மாற்றும் தொழில்நுட்பம். இதனை BAE Systems தலைமையில் வடிவமைக்கப்பட்டது.
வெறும் 22,000 டொலர் செலவில், இது பாரம்பரிய லேசர் வழிநடத்தப்பட்ட ஏவுகணைகளைவிட குறைந்த விலை மற்றும் குறைந்த எடையைக் கொண்டது.
2021-ல் வெளியிடப்பட்ட proximity fuse மற்றும் 2025-ல் அறிமுகமான dual-mode infrared வழிநடத்தும் மொடல் ஆகியவை, இந்த ஆயுதத்தை சுயமாக குறிக்கோளை அடையக்கூடியதாக மாற்றி உள்ளன. இதன் மூலம், சாமான்ய லேசர் குறிகாட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்த தேவையில்லை, சுறுசுறுப்பான தாக்குதல்களை இலகுவாக மேற்கொள்ள முடியும்.
F-15E விமானம் கடந்த காலத்தில் பல முக்கிய போர் நடவடிக்கைகளில் பங்கு பெற்றுள்ளது. ஆனால் அதன் ஏவுகணை மதிப்பீடு (magazine depth) குறைவாக இருந்ததால், 2024-ல் இஸ்ரேலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கிய போது, சில விமானங்கள் தங்கள் ஆயுதங்களை விரைவில் இழந்தன.
APKWS II-ன் ஒருங்கிணைப்பு, F-15E-க்கு மிகப்பாரிய சாத்தியக்கூறுகளை வழங்குகிறது. இது குறைந்த செலவில், அதிக எண்ணிக்கையிலான இலக்குகளை தாக்கக்கூடிய திறனை ஏற்படுத்துவதால், எதிர்கால ட்ரோன் மோதல்களுக்கு முக்கிய ஆயுதமாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
F-15E APKWS II test, US Air Force drone defense, APKWS II rocket upgrade, Counter-UAS F-15E, Dual-mode APKWS infrared, Strike Eagle drone protection, USAF anti-drone weapons, APKWS II 2025 updates, BAE Systems APKWS rockets, Missile alternatives F-15E, exclusive