அமெரிக்காவிடம் வேகமாக தீர்ந்து வரும் ஏவுகணைகள்: பென்டகன் அதிகாரிகள் தீவிர ஆலோசனை
ஈரான் போரின் விளைவாக டோமாஹாக் ஏவுகணை தட்டுப்பாட்டால் அமெரிக்கா ராணுவம் புதிய நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது.
ஏவுகணை நெருக்கடி
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தீவிர இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றனர்.
தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவலின் படி, ஈரானுக்கு எதிரான போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கா கிட்டத்தட்ட 850-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கில் டோமாஹாக்(Tomahawk) ரக ஏவுகணை வேகமாக குறைந்து வருவதால் பென்டகன் அதிகாரிகளிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.
ஏவுகணை பயன்படுத்தப்படும் வேகத்திற்கு ஏற்ப புதிய ஏவுகணைகளை தயாரிக்க முடியாது என்பதால் பென்டகன் அதிகாரிகள் ஏவுகணை பயன்பாடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்த டொமாஹாக் ஏவுகணையானது 1000 மைல்களுக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை என்பதால் இதனை தயாரிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதங்கள் இடமாற்றம்

இந்நிலையில் ஆயுத பற்றாக்குறையை சமாளிக்க இந்தோ-பசிபிக் போன்ற உலகின் பல பகுதிகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு திருப்பி விடுவது குறித்து பென்டகன் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
மேலும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை உற்பத்தி செய்து தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |