அமெரிக்காவில் 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க FDA ஒப்புதல்!
அமெரிக்காவில் 5 வயது குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க ஒப்புதல் வழங்கவுள்ளது.
அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களுக்கான முதல் கோவிட்-19 தடுப்பூசி அளவை விரைவில் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் சுயாதீன மருத்துவ ஆலோசகர்கள் குழு, செவ்வாய்க்கிழமையன்று குழந்தைகளுக்கான ஃபைசர் (pfizer) கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது அதற்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைத்து மற்றும் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன் அடிப்படியில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விரைவில் அதன் அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Source: Reuters
அமெரிக்காவில் குறித்த வயது வரம்பில் 28 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசிக்காக காத்திருக்கும் நிலையில், நவம்பர் நடுப்பகுதியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
இந்த வயது வரம்பில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் 90.7 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று ஃபைசரின் சான்றுகள் FDA குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசியை FDA அங்கீகரித்தால், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு அடுத்த வாரம் இந்த வயது வரம்பில் அதன் பயன்பாடு குறித்த தனது சொந்த பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்.
ஆதரவாக பெரும்பான்மை இருந்தபோதிலும், இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் நன்மைகள் ஆபத்துக்களை விட அதிகமாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க வல்லுநர்கள் சிரமப்படுவதாக தெரிகிறது.
5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை விட குறைந்த அளவிலான தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. (10 மைக்ரோகிராம்)
முழு தடுப்பூசி போடவேண்டுமெனில், பெரியவர்களைப் போலவே மூன்று வார இடைவெளியில் கொடுக்கப்பட்ட இரண்டு டோஸ்களை போடவேண்டும்.