தரையில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்: விமானியின் தற்போதைய நிலை?
அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம் சான் டியாகோவில் இராணுவ தளத்தில் விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்னதாகவே விமானத்தில் இருந்து விமானி வெளியேறிவிட்டார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மிராமர் கடற்படை விமான தளத்திற்கு அருகில் காலை 10 மணியளவில் F-35 ரக போர் விமானம் விபத்தில் சிக்கியதாக அந்த விமான தளத்தில் செய்தி தொடர்பாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட விமானி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து சம்பவத்தில் வேறு யாரேனும் காயமடைந்து உள்ளனரா என்பது குறித்து செய்தி தொடர்பாளரால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை.
விமானத்தில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இருந்து புகை மண்டலம் வெளியேறிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
F-35B விமானம் என்பது கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் இயக்கப்படும் அதிநவீன ஸ்டெல்த் ரக போர் விமானம் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |