தூக்கமில்லாத விமானிகள்..! செங்குத்தாக தரையில் மோதிய விமானம்: பயணிகளின் பரிதாப நிலை
23 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற பயணிகள் விமானம் ப்ரொப்பல்லர்கள் கோளாறு காரணமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பாதையில் இருந்து விலகிய விமானம்
1991ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டிக் சவுத் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் 2311, தூக்கம் இல்லாத சோர்வான விமானிகள் மற்றும் புரோப்பல்லர் கோளாறு போன்ற தொடர்ச்சியான தவறுகள் காரணமாக விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானம் 2311 ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரன்சுவிக்(Brunswick) செல்ல வேண்டிய பாதையில் பயணிக்க வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக பாதையில் இருந்து விலகியதாக கூறப்பட்டுள்ளது.
Wikipedia
மேலும் இடது பக்கமாக சாய்ந்த விமானம் தரையில் இருந்து 100 அடி உயரத்தில் பறந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த விமானம் அதன் இடது ப்ரோப்பல்லரை இழந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு விமானத்தின் மூக்கு பகுதி செங்குத்தாக முதலில் தரையில் மோதியது. முன்னாள் விண்வெளி வீரர், செனட்டர் உட்பட விமானத்தில் பயணித்த 23 பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் விமானிகள் கேப்டன் மார்க் ஃபிரைட் லைன் (34) மற்றும் முதல் அதிகாரி ஹாங்க் ஜான்ஸ்டன் (36) ஆகியோரும் உயிரிழந்தனர்.
Youtube/Plane'n Boom
புரோப்பல்லர் கோளாறு
இந்நிலையில் விமான விபத்து குறித்த தீவிர விசாரணையை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மேற்கொண்டது. அதில் அட்லாண்டிக் சவுத் ஈஸ்ட் விமான நிறுவனம், விமானிகளுக்கு அதிக வேலை நேரம் ஒதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் விமானிகள் தங்களது பயணத்திற்கு முன் வெறும் 5 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே தூங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTSB
இருப்பினும் நடத்தப்பட்ட விசாரணையில் விமானிகளின் தூக்கமின்மைக்கும் விபத்திற்கும் நேரடி பங்கு இல்லை என்பதை அறிக்கை உறுதிப்படுத்தியது.
இறுதியில், "இடது இயந்திர புரோப்பல்லர் கட்டுப்பாட்டு அலகு செயலிழப்பால்" விபத்து ஏற்பட்டதாக சாத்தியமான காரணத்தை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டது.