30 மணி நேரம் கவிழ்ந்த படகில் தத்தளித்த இளைஞர்: சுறா மீன் வட்டமிட்ட போது மீட்கப்பட்ட சம்பவம்
அமெரிக்காவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து 30 மணி நேரமாக கடலில் தத்தளித்த இளைஞரை அமெரிக்க கடலோர காவல் படை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மீன்பிடிக்க சென்ற இளைஞர்
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த சார்லஸ் என்ற இளைஞர் மீன்பிடிப்பதற்காக 12 அடி நீளமுள்ள படலில் கடலுக்குள் சென்றுள்ளார்.
ஆனால் மீன் பிடிக்க சென்ற சார்லஸ் 24 மணி நேரத்தை தாண்டியும் திரும்பி வராததால், பீதியடைந்த அவருடைய தந்தை உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை நடத்திய கடலோர காவல்படை, இறுதியில் கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கடலில் தத்தளித்த சார்லஸை கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் சார்லஸ் அமெரிக்க கடலோர காவல் படை படகில் சென்று பத்திரமாக மீட்டனர்.
ராட்சத அலையில் கவிந்த படகு
மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது ராட்சத அலை தாக்கி படகு மூழ்கத் தொடங்கியது, அப்போது என்னுடைய செல்போனும், லைப் ஜாக்கெட்டும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுறா மீன் தன்னை வட்டமிட்ட போது சரியான நேரத்தில் கடலோர காவல்படை வந்து தன்னை மீட்டதாகவும் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |