படகு செல்லும் தூக்குப்பாலத்தில்...90 அடி உயரத்தில் செங்குத்தாக தொங்கிய இளைஞர்!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தூக்குப் பாலம் ஒன்றில் இளைஞர் ஒருவர் செங்குத்தாக தொங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இளைஞரின் துணிச்சல் செயல்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான மியாமியில் பெரிய படகுகள் கடப்பதற்காக மிகப் பிரம்மாண்டமான தூக்குப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரிக்கல் அவின்யூ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பாலம், திங்கட்கிழமை கீழே படகு செல்வதற்காக தூக்கப்பட்ட போது இளைஞர் ஒருவர் அந்த பாலத்தின் மீது செங்குத்தாக ஏறத் தொடங்கினார்.
'My palms are sweating!' Thrilling moment #daredevil climber is caught on camera clinging to upright #Miami drawbridge pic.twitter.com/Y8maUoraaq
— Hans Solo (@thandojo) April 1, 2023
ஒரு கட்டத்தில் பாலம் செங்குத்தாக நிறுத்தப்பட்ட போது, அந்த இளைஞர் பாலத்தில் செங்குத்தாக தொங்கியபடி சாகசம் செய்தார்.
தப்பி ஓடிய இளைஞர்
இளைஞர் ஆபத்தான இந்த செயல் தொடர்பாக பொலிஸாருக்கு அடுக்கடுக்கான அழைப்புகள் சென்ற நிலையில், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
twitter
ஆனால் 90 அடி உயரத்தில் இருந்த இளைஞர் கைகள் வியர்ப்பதாக கூறி பாலம் இறக்கப்படும் போது வேகவேகமாக இறங்கி பொலிஸார் வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பொலிஸார் தேடி வேட்டை நடத்தியும் ஆபத்தான சாகசத்தை செய்த இளைஞரை கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.