பெண் ஆசிரியையை அடித்து தள்ளிய பள்ளி மாணவர்: பின்னணியில் உள்ள காரணம்? வீடியோ
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீடியோ கேம் சாதனத்தை பறிமுதல் செய்த ஆசிரியர் மீது 17 வயது டீன் ஏஜ் மாணவன் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பொலிஸாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் மீது தாக்குதல்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், வகுப்பறை நேரத்தில் வீடியோ கேம் பயன்படுத்திய மாணவனை கண்டிக்கும் விதமாக அதை பறிமுதல் செய்த ஆசிரியை மீது 17 வயது உயர்நிலைப் பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் போஸ்ட் செய்திகளின்படி, இந்த சம்பவம் பாம் கோஸ்ட்டில் உள்ள Matanzas உயர்நிலைப் பள்ளியில் நடந்துள்ளது.
The story is this teacher took away his Nintendo and he chased her down and beat the hell out of her.
— Hodgetwins (@hodgetwins) February 24, 2023
What is wrong with these kids… pic.twitter.com/83wPdja2yt
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், அதில் ஆத்திரமடைந்த டீன் ஏஜ் மாணவர் ஹால்வேயில் ஆசிரியரை நோக்கி வேகமாக செல்லுகிறார், பின்னர் ஆசிரியரை தரையில் தள்ளி தாக்குகிறார், சிலர் ஆசிரியரிடம் இருந்து சிறுவனை பிரிக்கும் வரை தொடர்ந்து தாக்குகிறான்.
மாணவன் கைது
இதனை தொடர்ந்து ஆசிரியர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்.
வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவன், உடல் ரீதியான தீங்கு விளைவித்த குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Twitter/@Tomhennessey69
வகுப்பின் போது மாணவர்களின் வீடியோ கேமை ஆசிரியர் பறிமுதல் செய்ததை அடுத்து, உடல் ரீதியான தாக்குதல் சம்பவம் நடந்ததை ஃபிளாக்லர் கவுண்டி ஷெரீப் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.