ரஷ்யாவிற்கு வலுவான இறுதி அடி... முன்னாள் அமெரிக்க தளபதி எச்சரிக்கை!
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில் மிக வலுவான நாக் அவுட் அடியை உக்ரைன் விரைவில் ரஷ்யாவிற்கு வழங்கும் என அமெரிக்க முன்னாள் தளபதி மார்க் ஹெர்ட்லிங் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 118வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் போர் தாக்குதலானது உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் தீவிரமடைந்துள்ளது.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்த சமீபத்திய அறிவிப்பில், ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் உக்ரைனிய படைகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன, ஆயிரக்கணக்கான உக்ரைனிய வீரர்கள் கொல்லப்படுகின்றனர்.
Tomorrow is day 118.
— Mark Hertling (@MarkHertling) June 21, 2022
RU manpower will continue to deplete. UA resources will continue to grow.
The west must keep up the support. 16/16
எனவே ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட மேற்கத்திய நட்பு நாடுகள் அதிநவீன போர் ஆயுதங்களை உடனடியாக உக்ரைனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கத்திய கூட்டணியின் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், முன்னாள் அமெரிக்க லெப்டினன்ட் ஜெனரல் மார்க் ஹெர்ட்லிங் தெரிவித்துள்ள கருத்தில், பீரங்கிகளின் எண்ணிக்கை அதிகளவு போர் முனையில் இருந்தாலும், மேற்கத்திய ஆயுதங்கள் தற்போதுப் போரின் முன்களத்திற்கு வர இருப்பதால், உக்ரைன் படைகள் அதிகப்படியான முன்னேற்றங்களை விரைவில் பெரும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நான்கு மாதங்களாக நடைபெரும் இந்த போர் நடவடிக்கையால் ரஷ்ய படைகள் வீரர்கள் மன உறுதி மற்றும் உளவியல் சோர்வு அடைந்து விட்டனர், இதனால் ரஷ்ய படைகள் தங்களது வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அதிகளவு இழக்க தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுடன் கூட்டணி சேர்ந்த நாடு! மொத்தமாக உருக்குலைத்து ரஷ்யாவுக்கு தந்த ஷாக்... வீடியோ காட்சி
இருநாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை குத்துச்சண்டை என வர்ணித்த மார்க் ஹெர்ட்லிங் , இரண்டு மாதங்களாக உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் போரில் மிக வலுவான அடி ஏதும் வழங்கப்படவில்லை, ஆனால் அது விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.