மரணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு..! நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி
அமெரிக்காவில் புற்று நோயால் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுமி தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி
அமெரிக்காவில் எம்மா எட்வர்ட் என்ற 10 வயது சிறுமி லுகேமியாவால் இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” என்ற தன்னுடைய அன்பான நண்பனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
எம்மாவிற்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா(acute lymphoblastic leukaemia) என்ற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது, இருப்பினும் எம்மாவின் பெற்றோர்களான அலீனா மற்றும் ஆரோன் எட்வர்ட் நோய் பாதிப்பை குணப்படுத்தி விடலாம் என்று எண்ணினர்.
Kennedy News/Erick Messer
ஆனால் எம்மாவின் புற்றுநோய் குணப்படுத்த முடியாது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஜூன் மாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இருந்தும் மனம் தளராமல் மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டு எம்மாவை காப்பாற்றி விடலாம் என்று பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எந்த முயற்சியும் இனி கைகூடாது, எம்மா இன்னும் சில வாரங்களுக்கு பிறகு நம்மை விட்டு பிரிந்து விடுவாள் என்பதை உணர்ந்த எம்மாவின் தாய் அலீனா, “டிஜே”வின் தாயுடன் பேசி விரைவாக மாதிரி திருமணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
Kennedy News/Erick Messer
எம்மா-வை மணந்த அன்பு நண்பர்
100 விருந்தினர்கள் வரை அழைக்கப்பட்டு தோட்டத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிறுமி எம்மா-வை அவளது நெருங்கிய நண்பன் டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” திருமணம் செய்து கொண்டார்.
இதில் அவர்களது நண்பர் ஒருவர் பைபிள் வாசித்தார், எம்மாவின் நண்பர் ஒருவர் மரியாதை வழங்கினார்.
Kennedy News/Erick Messer
இதனிடையே எம்மாவின் தாய் அலினா தன்னுடைய மருமகன் “டிஜே” நீங்கள் பார்த்ததில் மிகவும் அன்பான ஆத்மா கொண்டவர், அத்துடன் அவர் எம்மாவை மிகவும் நேசித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
acute lymphoblastic leukaemia, Emma Edward, Daniel Marshall Christopher "DJ" Williams