பிரபல நடிகையை போல டிக்டோக்கில் பிரதிபலித்த கல்லூரி மாணவி..குவியும் திருமண விருப்பங்கள்
அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகை மார்காட் ரோபியை பிரதிபலித்து டிக்டோக் செய்த கல்லூரி மாணவிக்கு திருமண விருப்பங்கள் குவிந்து வருகின்றன.
பிரபல அமெரிக்க நடிகை
The Wolf of Wall Street படத்தின் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமானவர் மார்காட் ரோபி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், முதன்மை கதாநாயகியாக நடித்த Birds of Prey திரைப்படத்தில் நடிப்புக்காக பாராட்டப்பட்டார்.
@Mary Cybulski
இந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் டிக்டோக்கில் மார்காட் ரோபி போன்ற தோற்றத்துடன் அவரை பிரதிபலித்து வீடியோக்களை வெளியிட்டார்.
குவியும் திருமண விருப்பங்கள்
லெக்ஸி ஆஷ்டன் என்ற அந்த மாணவியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதிகளவில் பார்வையாளர்களைப் பெற்றது. அத்துடன் தங்கள் கருத்துக்களை பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
ஒரு சிலர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு குறித்த மாணவிக்கு தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விருப்பங்கள் தன்னை திக்குமுக்காட செய்வதாக லெக்ஸி தெரிவித்துள்ளார்.