8 வயது சிறுமியின் உயிரை குடித்த அரிய வகை மூளை தின்னும் அமீபா: லூசியானாவில் சோகம்
8 years old girl loses his life to brain eating amoeba: அரிய வகை மூளை தின்னும் அமீபாவால் லூசியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
மூளை தின்னும் அமீபாவால் பறிபோன சிறுமியின் உயிர்
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் ரஸ்டன்(Ruston) பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி லில்லியன் ஸ்மார்ட்(Lillian Smart) க்ளெய்போர்ன் ஏரியில்(Lake Claiborne) நீராடிய போது அரிய வகை மூளைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லில்லியன் ஸ்மார்ட் தன்னுடைய 8வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே(ஆகஸ்ட் 22ம் திகதி) சனிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த துயர செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளனர்.

மருத்துவர்களின் தீவிரமான சிகிச்சைக்கு பிறகும் மூளையில் ஏற்பட்ட தீவிரமான பாதிப்பு காரணமாக அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக குடும்பத்தினர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்
ஆகஸ்ட் 15ம் திகதி 8 வயது சிறுமியான லில்லியன் ஸ்மார்ட்டின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 19ம் திகதி லூசியானா சுகாதாரத்துறை, மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு நெக்லேரியா பவுலேரி(Naegleria fowleri) தொற்று பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.
மேலும் கிளைபோர்ன் பாரிஷில் உள்ள க்ளெய்போர்ன் ஏரியில் நீந்திய போது இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் அந்த பாதிக்கப்பட்டவர் 8 வயது சிறுமியான லில்லியன் தான் என்று அவரது குடும்ப நண்பர்கள் உறுதிப்படுத்தினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |