Green Card 2026: அமெரிக்க நிரந்தர குடியிருப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
அமெரிக்க பயணம் என்பது பலருக்குக் கனவாகும். வேலைக்காக, சிலர் பேரன் பேத்தியை பல வருடங்களுக்குப் பின்பு பார்ப்பதற்கு, இன்னும் சிலருக்கு சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்கு செல்வது என பல காரணங்கள் வைத்துள்ளனர்.
இப்படி அமெரிக்கா செல்ல திட்டமிடும் அனைவருக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது விசா. அவ்வளவு எளிதாக விசா கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.
அதற்காக தான், அமெரிக்கா ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை வழங்கி வருகின்றது.
அந்தவகையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் 2026 ஆம் ஆண்டிற்கான Green Card திட்டம் தொடங்குவதற்கான திகதியை அறிவித்துள்ளது.
Green Card 2026
இந்த திட்டம் இன்று, அக்டோபர் 2, மதியம் 12:00 மணி முதல் நவம்பர் 5, 2024 வரை ஆன்லைன் பதிவுக்காக திறந்திருக்கும்.
இந்தத் திட்டம் குறைந்த அமெரிக்க குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அமெரிக்க குடியேற்ற விசாவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.
http://dvprogram.state.gov இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பதிவை பதிவு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். கடைசி நிமிடங்களில் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதில் பல தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |