புலம்பெயர முயன்றவர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் படகுகள் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் தண்ணீரில் கவிழ்ந்ததை தொடர்ந்து அதில் 11 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சட்டப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவில் குடியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் குடியேறிகளின் படகுகள் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் கடந்த வியாழன்கிழமை கவிழ்ந்ததை அடுத்து இதில் 11 நபர்கள் வரை இறந்து இருப்பதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் இதுவரை 33 நபர்கள் வரை உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும் 11 நபர்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கடலோர காவல்படை செய்தி தொடர்பாளர் ரிக்கார்டோ காஸ்ட்ரோடாட்,அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேற முயன்றவரிகளின் படகுகளில் எத்தனை நபர்கள் இருந்தார்கள் என்ற முழுவிவரம் தெளிவாக தெரியவில்லை ஆனால் முடிந்தவரை உயிர்பிழைத்தவர்களை மீட்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற நபர்களில் 8 நபர்கள் ஹைட்டியர்கள் என்றும் பிற நபர்கள் குறித்து தகவல் தெளிவான தகவல் தெரியவில்லை எனவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம் நடிகை: பொலிஸார் தீவிர விசாரணை
மேலும் கடந்த சிலமாதங்களாக படகுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதில் பெரும்பாலானோர் ஹைட்டியர்கள், கியூபர்கள் மற்றும் டொமினிகன்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.