அமெரிக்காவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கடலோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை
கலிபோர்னியா வளைகுடா பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் நிலநடுக்கம்
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா வளைகுடா பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை மெக்சிகோ சிவில் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
Rappler
இருப்பினும் படகுகள் மற்றும் கடலோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 10 கி மீ ஆழத்தில் நடந்து இருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
WWF
சுனாமி எச்சரிக்கைகள் இல்லை
நிலநடுக்கம் பதிவான சிறிது நேரத்தில் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு வழங்கிய தகவலில் அமெரிக்க மேற்கு கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்கா ஆகியவற்றுக்கு சுனாமி எச்சரிக்கைகள் இல்லை என தெரிவித்துள்ளது.
யு.எஸ் புவியியல் ஆய்வு நிலநடுக்கத்தை 6.3 ரிக்டர் என்ற அளவில் மதிப்பிட்டுள்ளது.