உக்ரைனில் உயிரியல் ஆயுதங்களை அமெரிக்கா மறைத்து வைத்திருக்கிறது! பரபரப்பை கிளப்பும் ரஷ்யா
உக்ரைனில் உயிரியல் ஆயுதங்களை அமெரிக்கா மறைத்து வைத்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
சீனாவின் ரகசிய ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட கிருமி தவறுதலாக வெளியேறி பரவியதுதான், உலகை அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் என்ற புரளிக்கு மத்தியில், ரஷ்யாவின் இந்த கூற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.
இன்று மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Maria Zakhorava, உக்ரைனில் அமெரிக்கா உயிரியல் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
உக்ரைன்-ரஷ்யா எல்லைக்கு அருகில் உயிரியல் ஆயுதங்களின் கூறுகளை அமெரிக்கர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்ற ரஷ்யாவின் கூற்றுக்களை ஆதரிக்கும் ஆவணங்களை தான் பார்த்ததாக Maria Zakhorava தெரிவித்தார்.
மேலும், உக்ரைனில் அமெரிக்கா என்ன செய்து வருகிறது என்பது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரிய Maria Zakhorava, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் நேரடியாக திட்டத்தை இயக்குகிறது என கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு பிளேக், ஆந்த்ராக்ஸ் மற்றும் காலரா ஆகியவை உயிரியல் போரில் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு வருகின்றன என ரஷ்ய மேஜர் ஜெனரல் Igor Konashenkov கூறியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.