மாணவர், சுற்றுலா, H-1B விசா கட்டணங்களை உயர்த்திய அமெரிக்கா.., எவ்வளவு தொகை உயர்வு?
மாணவர், சுற்றுலா மற்றும் இந்திய பணியாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் H-1B விசா கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
விசா கட்டணங்கள் உயர்வு
மாணவர், சுற்றுலா மற்றும் இந்திய பணியாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் H-1B விசா கட்டணங்களை 250 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.21,000) வரை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இது பாதுகாப்பு வைப்புத்தொகை என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தப்படும் இந்த கட்டணமானது 2026-ம் ஆண்டில் இருந்து அமுலுக்கு வரவுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் சில அளவுகோல்களை பூர்த்தி செய்தால் அந்தத் தொகை திரும்பப் பெறப்படலாம்.
விண்ணப்பதாரர்கள் அமெரிக்க குடியேற்றச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சியாக இது கருதப்படுகிறது. அதாவது, அமெரிக்கா விசா காலக்கெடு முடிந்தவுடன் நீட்டிப்பு கோராமல் அமெரிக்காவை விட்டு வெளியேறினால் இந்த தொகை திரும்ப கொடுக்கப்படும்.
ஜூலை 4 ஆம் திகதி அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவின் அடிப்படையில் சில சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதில் விசா கட்டண உயர்வும் ஒன்றாகும்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும், வெளிநாடுகளில் இருந்து சட்டபூர்வமாக அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதிலும் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். குறிப்பாக அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அவர் பின்பற்றி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |