இனி பேச்சுக்கு இடமில்லை: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
Us has no plans to talk with iran: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு திட்டமும் தற்போது அமெரிக்காவிடம் இல்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பேச்சுவார்த்தை குழுவிடம் முக்கிய சில விடயங்களை அறிவுறுத்தி இருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், ஈரான் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு தயாராகும் வரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் அமெரிக்க தரப்பில் இருந்து முன்னெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மேற்கொண்டு முன் செல்வதற்கு காத்திருக்குமாறு டிரம்ப் அறிவுறுத்தி இருப்பதாக அதிகாரி ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு பதில்கள்
சமீபத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடல்களோ நடைபெறவில்லை. மேலும் ஹார்முஸில் அமெரிக்க கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்வதாகவும், ஹார்மூஸ் நீரிணை திறந்த நிலையில் இயங்குவதாகும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹார்முஸ் முற்றுகையை நீக்குதல், ஈரானிய எண்ணெய் மீதான தடையை நீக்குதல், வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகிய 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தன்னுடைய வாக்குறுதிகளை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |