ஹார்முஸ் ஜலசந்தியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஹெலிகாப்டர்: விமானிகள் நிலை என்ன?
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் மோதல்
லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை சமீபத்தில் நடத்தியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேலிய படைகளும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மோதல் பிராந்தியத்தில் பதற்றத்தை மீண்டும் அதிகரிக்க செய்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து
இந்நிலையில் திங்கட்கிழமை அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத இரண்டு நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
விபத்தின் போது ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தானது இயந்திர கோளாறால் ஏற்பட்டதா அல்லது ஈரானின் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதா என தற்போது தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |