கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அமெரிக்காவில் அனுமதி: தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் தற்காலிகமாக பயன்படுத்த அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கருக்கலைப்பு மாத்திரை
அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
AP
இந்த உத்தரவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர், மேலும் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
தடை நீக்கம்
இந்நிலையில் அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளை தற்காலிகமாக பயன்படுத்த அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதை தடை விதித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால காலை தடை விதித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரை சுலபமாக கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.