ரஷ்யாவிற்கு இன்னும் பேரிடி காத்திருக்கிறது... தயாராகும் ட்ரம்ப் நிர்வாகம்
உக்ரைன் போரை நிறுத்த விளாடிமிர் புடின் இன்னும் தாமதம் செய்வார் என்றால், ரஷ்ய பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களை குறிவைக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து அழுத்தமளிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் கோரியுள்ளது. மேலும், முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களில் இருந்து பெருந்தொகைக்கு அமெரிக்க ஆயுதங்கள் வாங்கி, உக்ரைனுக்கு உதவும் திட்டத்திற்கும் அமெரிக்க அதிகாரிகள் ஆதரவளித்துள்ளனர்.

ஆனால், இந்த நகர்வுகள் அனைத்தும் மிக விரைவிலேயே அமெரிக்கா முன்னெடுக்குமா என்பதில் உறுதியான தகவல் இல்லை. ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக முதல் முறையாக பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைனில் ரஷ்யாவின் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பது எதிர்பார்த்ததை விட கடினமான விவகாரம் என்பதையும் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் புடினிடம் அமெரிக்கா போலியான கோபத்தை வெளிப்படுத்தி வருவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையிலேயே, மிக முக்கியமான எண்ணெய் நிறுவனங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகள் விதித்தது.
ஆனால், இந்த நிறுவனங்கள் மீது ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியாவும் ஏற்கனவே தடை விதித்துள்ளன. இந்த நிலையில், ரஷ்யா மீது அடுத்தகட்ட மிகப்பெரிய நகர்வை ஐரோப்பிய நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் வங்கித்துறை
அது தடைகளாக இருக்கலாம் அல்லது வரி விதிப்பகவும் இருக்கலாம் என்றார். மேலும், புதன்கிழமை அறிவிக்கப்பட்ட தடைகளுக்கு ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை கவனிக்கும் பொருட்டு சில வாரங்கள் ட்ரம்ப் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
புதன்கிழமை ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட தடைகளால் எண்ணெய் விலை சட்டென்று 2 டொலர் அதிகரித்தது. அத்துடன் மலிவான ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்து வந்த சீனா மற்றும் இந்திய நிறுவனங்கள் மாற்று வழி தேடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக ரஷ்யாவின் வங்கித்துறை மற்றும் உள்கட்டமைப்பை அமெரிக்கா குறிவைக்கும் என்றே தகவல் கசிந்துள்ளது. இது உக்ரைன் அதிகாரிகள் முன்வைத்துள்ள யோசனை என்றும், அமெரிக்க அதிகாரிகள் அதில் ஆதரவு தெரிவித்துள்ளார்களா என்பதிலும் உறுதியான தகவல் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |