மனைவியுடன் தேனிலவு பயணம்: அமெரிக்காவில் இந்திய இளைஞர் மீது துப்பாக்கி சூடு
இந்தியாவின் ஆக்ராவை சேர்ந்த 29 வயது இளைஞர் அமெரிக்காவில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுமண தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் Indianapolis பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவின் ஆக்ராவை சேர்ந்த கவின் தசூர் (Gavin Dasaur) 29 வயது இளைஞர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கவின் தசூர் மற்றும் மெக்சிகோவை சேர்ந்த அவரது மனைவி சிந்தியா விவியானா ஜமோரா(Cinthya Viviana Zamora) இருவருக்கும் திருமணம் ஆகி 18 நாட்களே ஆகியிருந்த நிலையில், அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அவர்களை வெள்ளை நிற Chevy pickup truck ஆபத்தான முறையில் கடந்து சென்றுள்ளது.
வீடியோ ஆதாரம்
காவல்துறையில் தகவல் படி, சம்பவ இடத்தில் இருந்து பெறப்பட்ட காட்சிகளில், கவின் தசூர் வேகமாக சென்ற லொறியை மறித்து அதன் சாரதியிடம் கோபத்துடன் பேசுவதையும், வாகனத்தின் மீது தாக்குவதும் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.
அத்துடன் இந்த சமயத்தில் டிரக் சாரதி தன்னிடம் உள்ள துப்பாக்கியால் கவின் தசூரை சுட்டுள்ளார்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையை துவங்கினர்.
ஆனால் கவின் குடும்பத்தினர் விசாரணை மீதான அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட டிரக் ஓட்டுநர் அமெரிக்க குடிமகனாக இருப்பதால் விடுவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
Indianapolis மெட்ரோபொலிட்டன் காவல்துறை துறை இந்த துப்பாக்கி சூடு இரவு 8:15 மணியளவில் நடந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் சம்பவம் குறித்தும், துப்பாக்கி சூடு நடந்ததற்கு முன்னதாக நடந்த சாலை ஆவேச மோதல் குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |