180 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு அமெரிக்கா அளித்துள்ள கௌரவம்
US House honours Indian pilot Smit Machchhar: இந்திய விமானியான ஸ்மித் மச்சாரை கௌரவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வாரம், விமானி ஒருவர் Flydubai விமானத்தைக் கடத்தி தரையில் மோத முயன்றபோது துணிச்சலுடன் செயல்பட்ட, இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு அமெரிக்கா கௌரவம் ஒன்றை வழங்கியுள்ளது.
இந்திய விமானிக்கு அமெரிக்கா அளித்துள்ள கௌரவம்
கேப்டன் ஸ்மித்தை கௌரவிக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை, இருகட்சித் தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தத் தீர்மானம், தனது விமானத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் பாதுகாப்பதில் காட்டிய அசாதாரணமான தைரியத்திற்காக கேப்டன் ஸ்மித்தை குறிப்பாகப் பாராட்டுகிறது.
அத்துடன், விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்க உதவிய, பணியில் இல்லாத விமானிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளையும் பாராட்டுவதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
U.S. House introduced H. Res. 1612 honoring Indian-origin Captain Smit Machchhar and the crew and passengers of Flydubai Flight 1073. The resolution commends their actions during an attempted terrorist attack, honors Machchhar’s courage, condemns the incident and calls for an expedited investigation by Saudi Arabia and the UAE
— IANS (@ians_india) October 6, 2026
மேலும், கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் காயமடைந்த அனைவரும் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அந்தத் தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது.
விமானத்தின் விமானிகள் அறைக்குள் சக விமானியால் கேப்டன் ஸ்மித் மச்சார் கழுத்து மற்றும் கைகளில் மிகக் கொடூரமாகக் குத்தப்பட்டார்.
பலத்த காயமடைந்த நிலையிலும், அவர் மனவலிமையுடன் போராடி விமானிகள் அறையின் கதவைத் திறந்து உதவி கோர, விமானப் பணியாளர்களும், பயணிகளும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர்.
அதன் காரணமாக, விமானத்திலிருந்த 4 அமெரிக்கர்கள் மற்றும் 27 குழந்தைகள் உட்பட மொத்தம் 174 பயணிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்காவின் தீர்மானம் கேப்டன் ஸ்மித் மச்சாரை கௌரவித்துள்ள அதே நேரத்தில், விமானம் மீதான தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயல் மற்றும் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு மீதான தாக்குதல் என்றும் கண்டித்துள்ளது.
மேலும், இச்சம்பவத்தை ஒரு பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்துள்ளதுடன், சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளது அந்தத் தீர்மானம்.