இந்தியானாவில் இந்திய வம்சாவளி மாணவருக்கு நேர்ந்த சோகம்; அலறல் சத்தம் கேட்டு மிரண்டுபோன கேமிங் நண்பர்கள்
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில், இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் தனது தங்கும் அறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அவருடன் அதே அறையில் தங்கிய கொரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வருண் மணீஷ் சேடா (Varun Manish Chheda), 20 என்ற இந்திய வம்சாவளி மாணவர், அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள தனது தங்குமிட அறையில் புதன்கிழமை இறந்து கிடந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மாணவர் வருண் மணீஷ் சேடா அவரது அறைக்குள் கொல்லப்பட்டார் மற்றும் கொலை பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிவரும் நிலையில், அவருடன் அதே அறையில் தங்கிய கொரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் இண்டியானாபோலிஸில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தின் மாணவரான வருண் மணீஷ் சேடா, அவர் வளாகத்தின் மேற்கு விளிம்பில் உள்ள McCutcheon ஹாலில் இறந்து கிடந்தார் என்று பொலிஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
புதன்கிழமை நள்ளிரவு 12:45 மணிக்கு 911க்கு அழைத்து மரணம் குறித்து காவல்துறைக்கு எச்சரிக்கை செய்த, அவருடைய ரூம்மேட் ஜி மின் ஷா கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின் ஷா கொரியாவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி மேஜர் மற்றும் சர்வதேச மாணவர் என்று பர்டூ பல்கலைக்கழக காவல்துறைத் தலைவர் லெஸ்லி வீட் புதன்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார். கொலைக்கு அழைப்பு விடுத்தவர் அவர்தான் என்றாலும், பிரதான சந்தேக நபராக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
NEW: Ji Min Sha has been booked into Tippecanoe County Jail. He faces one count of murder after his roommate, Varun Manish Chheda, was killed by “multiple sharp force traumatic injuries" overnight in a Purdue dorm. Details: https://t.co/mcdW0wcrBW pic.twitter.com/1RBIGl6MbF
— FOX59 News (@FOX59) October 5, 2022
மணீஷ் சேடாவின் பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, அவர் உடம்பில் கூர்மையான ஒரு பொருளால் சக்தியுடன் தாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வருண் சேடா ஒரு சுறுசுறுப்பான விளையாட்டாளர் என்றும், அவர் தாக்கப்பட்டபோது தனது ஆன்லைன் நண்பர்களுடன் கேமிங் அழைப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சேடாவின் குழந்தை பருவ நண்பரான அருணாப் சின்ஹா, செவ்வாய்க்கிழமை இரவு ஆன்லைனில் நண்பர்களுடன் கேமிங் மற்றும் பேசிக் கொண்டிருந்ததாக NBC நியூஸிடம் கூறினார்.
A memorial of letters and flowers is growing near the Unfinished Block P Statue on Purdue University’s campus in honor of Varun Manish Chheda, 20, of Indianapolis, stabbed to death overnight in his dorm room of McCutcheon Hall. @FOX59 @CBS4Indy pic.twitter.com/QpWIvpSVOl
— Courtney Spinelli (@CourtSpinelliTV) October 5, 2022
அழைப்பில் இருந்த அவரது கேமிங் நண்பர்கள் ஆன்லைனில் சேடாவின் அலறல்களைக் கேட்டதாகவும், தாக்குதலின் ஒரு பகுதியைக் கேட்டதாகவும், இன்னும் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் சின்ஹா கூறினார். பின்னர் புதன்கிழமையன்று அவரது தங்கும் அறையில் இந்திய மாணவர் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்டு அவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் கூரிய பொருளால் குத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மின் ஷா, 911 அழைப்புக்குப் பிறகு சில நிமிடங்களில் காவலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.