வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும்! டிரம்பின் அறிவிப்பால் பரபரப்பு
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தில் அமெரிக்கா நேரடி ஆதிக்கம் செலுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி கைது
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் ஆட்சி நடத்தி வருவதுடன், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி மதுரோ மற்றும் மனைவி கைது செய்யப்பட்டது குறித்து வெனிசுலா அரசு எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
வெனிசுலா எண்ணெய் வளத்தின் மீதான ஆதிக்கம்
மதுரோ கைது நடவடிக்கையை தொடர்ந்து வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் மற்றும் அதன் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அரசு நிர்வாகம் வெனிசுலாவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வெனிசுலாவின் அதிக லாபகரமான எண்ணெய் வளங்கள் அமெரிக்கா வலுவான கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு மறுத்த டிரம்ப்
இறுதி கட்டத்தில் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ பேச்சுவார்த்தைக்கு முயன்றதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் “அதற்கு நான் தயாராக இல்லை” என்று தெரிவித்து விட்டதாகவும் தெரிவித்த டிரம்ப், இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவத்தின் வலுவான அடையாளமாக டிரம்ப் வர்ணித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |