அமெரிக்கா - ஈரான் இடையே 60 நாள் போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையின் முக்கிய விவகாரங்கள்
அமெரிக்கா ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை 60 வரை நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நடவடிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
ஏற்கனவே இரு தரப்பிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் 60 நாட்கள் நீட்டிப்பது தொடர்பான உடன்பாடு இரு தரப்பிற்கும் இடையே விரைவில் எட்டப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும், நிலைத்தன்மையை உருவாக்கவும் பல முக்கிய நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கிய பேச்சுவார்த்தை விவகாரங்கள்
அதன்படி, ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து கடல்வழி சர்வதேச கப்பல் போக்குவரத்தை எளிதாக்குதல்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படையின் முற்றுகை மற்றும் பொருளாதார தடைகளை படிப்படியாக குறைத்தல்.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீர்த்துப்போக வைத்தல் அல்லது யுரேனிய கையிருப்பை வேறு இடங்களுக்கு மாற்றுதல்.
அத்துடன் வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துகளை படிபடியாக விடுவித்தல்.
இருநாடுகளுக்கு இடையிலும் ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக போர் நிறுத்தமானது எதிர்காலத்திற்கான இராஜதந்திர முயற்சியாகவும் மத்தியஸ்தர்களால் பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |