ராணுவ ட்ரோன் ஏற்றுமதி; ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, ஈரான்
us and iran dominates in global military drones export: உலகளாவிய ராணுவ ட்ரோன் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஈரான் சேர்ந்து சுமார் 86 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
உலகளாவிய ராணுவ ட்ரோன் ஏற்றுமதி
டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI), 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய இராணுவ ட்ரோன் வர்த்தகம் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், உலகளவில் மொத்தமாக 16,822 இராணுவ ட்ரோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதில், குறைந்தபட்சம் 150 கிலோ எடை கொண்ட ட்ரோன்களையும், ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களையும், வட்டமிடும் வெடிமருந்துகளையும் உள்ளடக்கியுள்ளது. சிறிய FPV மற்றும் வர்த்தக ட்ரோன்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
97 சதவீதம் ட்ரோன்கள், ஒருவழித் தாக்குதல் ட்ரோன்கள் ஆகும்.
அமெரிக்கா, ஈரான் ஆதிக்கம்
அமெரிக்கா 7,593 ட்ரோன்களை ஏற்றுமதி செய்து, உலகளாவிய இராணுவ ட்ரோன் ஏற்றுமதியில் 45.1 சதவீத பங்குகளுடன் முன்னிலை வகிக்கிறது.

அதைத் தொடர்ந்து ஈரான் 6,800 ட்ரோன்களை ஏற்றுமதி செய்து, 40.4 சதவீத பங்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இரு நாடுகளும் சேர்ந்து உலகளாவிய இராணுவ ட்ரோன் ஏற்றுமதியில் சுமார் 86 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
அமெரிக்காவின் ட்ரோன்கள் சுமார் 95 சதவீதம் உக்ரைனுக்குச் சென்ற நிலையில், ஈரானின் ஏற்றுமதியில் 99 சதவீதம் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டது.
ஈரானைப் பொறுத்தவரை, அதன் ஏற்றுமதிகளில் ஏறக்குறைய அனைத்தும் ஷாஹத்-136 ட்ரோன்களே ஆகும்.

அமெரிக்கா 2024 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 3,219 ட்ரோன்களை ஏற்றுமதி செய்தது. உக்ரைனுக்கான புதிய அமெரிக்க இராணுவ உதவி நிறுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 402 ஆகக் குறைந்தது.
2025 ஆம் ஆண்டில் ஈரான் 2,002 ட்ரோன்களை ஏற்றுமதி செய்தது.
28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த துருக்கி
ஜேர்மனி 1,000 ட்ரோன்களுடன் 3வது இடத்திலும், போலந்து 690 ட்ரோன்களுடன் 3வது இடத்திலும், துருக்கி 381 ட்ரோன்களுடன் 5வது இடத்திலும், இஸ்ரேல் 205 ட்ரோன்களுடன் 6வது இடத்திலும், சீனா 64 ட்ரோன்களுடன் 7வது இடத்திலும் உள்ளன.

துருக்கியின் ஏற்றுமதிகளில் பேரக்தர் TB2 போன்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய ட்ரோன்களே ஆதிக்கம் செலுத்தின.
அமெரிக்கா, ஈரானை போல் இல்லாமல் துருக்கி தனது ட்ரோன்களை 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.