அமெரிக்கா-ஈரான்: 60 நாள் போர்நிறுத்தம் நீட்டிப்பு
US-Iran to Extend Ceasefire: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்ளபட்டுள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன.
இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 60 நாள் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தது.
இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 17, 2026 அன்று முடிவடையவிருந்த நிலையில், இரு தரப்பும் அதை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

“இரு தரப்பும் மத்தியஸ்த குழுவிடம் போர்நிறுத்தத்தை நீட்டிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், நீட்டிப்பு காலம் எவ்வளவு என்பது குறித்து இன்னும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன” என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பின்னணி
ஏப்ரல் 2026-இல் பாகிஸ்தான் நடுவராக செயல்பட்டு, அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் ஜூன் 17, 2026 அன்று “Memorandum of Understanding” கையெழுத்தானது.
ஆனால், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் Hormuz நீரிணையில் சுதந்திரமான போக்குவரத்து குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் சிக்கலில் சிக்கின.
சமீபத்திய மோதல்கள்
ஜூலை 8 முதல் ஜூலை 24 வரை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்தன.
அமெரிக்கா, ஈரானில் உள்ள இலக்குகளை தாக்கியது. பதிலுக்கு, ஈரான் ஜோர்டான், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் அமெரிக்க இராணுவ வசதிகள் மற்றும் உபகரணங்களை தாக்கியது.
தற்போதைய நிலை
போர்நிறுத்தம் நீட்டிக்க இரு தரப்பும் சம்மதித்துள்ளதால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
ஆனால், நீட்டிப்பு காலம் எவ்வளவு என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படாததால், அடுத்த சில நாட்களில் முக்கிய முடிவுகள் வெளிவரும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |