ஈரான் - அமெரிக்கா இடையே ரகசிய பேச்சுவார்த்தை தொடக்கம்: மத்திய கிழக்கில் பதற்றம் தணியுமா?
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் ரகசிய வழியில் அமைதி பேச்சுவார்த்தையானது தொடங்கி இருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை தணித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை
ஈரான் - அமெரிக்கா இடையிலான இராணுவ நடவடிக்கை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் ஈரானுடன் மறைமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக CNN செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த முயற்சி இன்னும் முழுமையான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையாக மாறவில்லை என்றாலும், இந்த முதல் கட்ட தொடர்பு மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்த தகவலின் படி, இந்த பேச்சுவார்த்தை முயற்சியானது போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன் மட்டும் நின்று விடாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான தீர்வை நோக்கி முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஈரானின் தேசிய நலன்கள் பாதிக்கப்படாமல் அமெரிக்கா முன் மொழியும் எந்தவொரு விவகாரங்களையும் பரிசீலிக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை முயற்சியில் பல்வேறு சர்வதேச மத்தியஸ்தர்கள் மூலமாக ஈரானும் அமெரிக்காவும் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |