இந்தியாவிற்கு இன்னொரு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் நிர்வாகம்
அலாஸ்காவில் டர்ம்ப் - புடின் சந்திப்பு உரிய பலனை எட்டவில்லை என்றால் இந்தியா மீதான வரி சதவீதம் மேலும் அதிகரிக்கலாம் என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது எச்சரிக்கை
அலாஸ்கா மாகாணத்தில் உக்ரைன் போர் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பும் விளாடிமிர் புடினும் நேரிடையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் உடன்பாடு எட்டவில்லை என்றால், கடுமையான பின்விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் ஏற்கனவே மிரட்டியுள்ள நிலையில்,
தற்போது அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்தியா மீது எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது அல்லது அதன் நேர்மறையான இறையாண்மை மதிப்பீட்டு கண்ணோட்டத்தைப் பாதிக்காது என்றே அமைப்பு ஒன்று தமது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
மட்டுமின்றி, கடந்த ஆண்டு மே மாதத்தில் பதிவான வலுவான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி, இந்தியாவிற்கு மிகப்பெரிய நேர்மறையான முன்னோக்கை அளித்தது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6 ஆம் திகதி, இந்திய இறக்குமதிகள் அனைத்திற்கும் இருந்த 25 சதவீத வரிக்கு மேல் கூடுதலாக 25 சதவீத வரியை ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். இதனால், ஆகஸ்ட் 27ம் திகதி முதல் இந்த 50 சதவீத வரி அமுலுக்கு வருகிறது.
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெயை வாங்குவதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறியது, இதை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |