கனடாவுக்கு பயணிக்க வேண்டாம்! பிரபல நாடு எச்சரிக்கை
அண்டை நாடான கனடாவுக்கு பயணிக்க வேண்டாம் என நாட்டுமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
கனடாவில் ஒமிக்ரான் மாறுபாடு பரவல் காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அமெரிக்கா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC), கனடாவிற்கான அதன் பயண பரிந்துரையை நான்காம் நிலை, அதாவது ஆபத்து மிக அதிகம் என உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் கனடாவுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என CDC அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
CDC, சுமார் 80 இடங்களை அதன் நான்காம் நிலையில் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், அமெரிக்க வெளியுறவுத்துறையும் கனடாவிற்கான அதன் பயண பரிந்துரையை நான்காம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, அதாவது அந்நாட்டிற்கு பயணிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளது.