ரஷ்யா உக்ரைனை தாக்கும் என ஜோ பைடன் உறுதியாக கூறியது எப்படி?
கடந்த வாரம் ரஷ்யா உக்ரைனை தாக்கவுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி உறுதியாக கூறியது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை முன்னோக்கி நகர்த்துமாறு ரஷ்ய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அமெரிக்காவிற்கு உளவுத்துறையிடமிருந்து தகவல் கிடைத்தது என பெயர் குறிப்பிடாத ஆதாரங்களை மேற்கோள்கட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த உளவுத்துறைதான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வெள்ளிக்கிழமையன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படையெடுக்க முடிவு செய்ததாக உறுதிப்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக பெயரை குறிப்பிடாமல் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தகவல்கள் குறித்து கேட்டபோது வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறை என யாரும் உறுதிப்படுத்தவில்லை என செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த தகவல் குறித்து வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான ஒரு அறிக்கை, CBS, நியூயார்க் டைம்ஸ், CNN மற்றும் பிற பல அமெரிக்க ஊடகங்களுடன் ஒத்துப்போகிறது.
சென்ற வெள்ளிக்கிழமையன்று "இந்த நேரத்தில், அவர் (புடின்) தாக்குதல் நடத்த முடிவெடுத்துவிட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதை நம்புவதற்கு எங்களுக்கு காரணம் இருக்கிறது ”என்று ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கூறினார்.
அப்போது, ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எப்படி தெரியும் என்று கேட்டதற்கு, "எங்களிடம் குறிப்பிடத்தக்க உளவுத்துறை திறன் உள்ளது" என்று மட்டும் கூறினார்.