ஈரான் மீதான இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்காவும் கூட்டுத் தாக்குதலில் பங்கேற்பு
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பது போர் பதற்றத்தை மத்திய கிழக்கில் தூண்டியுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் அமெரிக்கா இடையே மோதல் வெடித்த நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தன்னுடைய போர் கப்பல்களை நிலைநிறுத்தி வந்தது.
மேலும் தன்னுடைய F-22 ரக போர் விமானத்தையும் இஸ்ரேலிய விமானப்படை தளத்தில் அமெரிக்கா நிலைநிறுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.

இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னதாகவே ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஈரானின் பதில் தாக்குதலை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தன்னுடைய வான் பரப்பை மூடியுள்ளது.
அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவின் நேரடி பங்களிப்பும் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால் அமெரிக்காவின் பங்களிப்பின் அளவு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

NBC செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலில், அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதாகவும், இந்த தாக்குதல் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி, அமெரிக்காவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும், அமெரிக்க படைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டே இந்த தாக்குதல் நடப்பதாக Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |