கோடிக்கணக்கில் ஏலம் போன பிரபலத்தின் ஒரு ஜோடி ஷூ! எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவின் பிரபல ராப் பாடகரான கன்யே வெஸ்ட் அணிந்த ஸ்னீக்கர் ஷூ கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் கன்யே வெஸ்ட் (Kanye West) அணிந்த Nike Air Yeezy 1s மொடலின் ஒரு ஜோடி ஸ்னீக்கர் ஷூ 1.8 மில்லியன் டொலருக்கு (ரூ. 13.44 கோடி) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட மொடல் ஷூவை கன்யே வெஸ்ட் கடந்த 2008-ஆம் ஆண்டு கிராமி விருது நிகழ்ச்சியில் "ஹே மாமா" மற்றும் "ஸ்ட்ராங்கர்" ஆகிய ராப் பாடல்களை பாடியை போது பயன்படுத்தினார்.
இந்த காலணியை Nike நிறுவனம் கன்யே வெஸ்ட்டுடன் இணைந்து பிரத்தியேகமாக உருவாகியிருந்தது. அதனால் இந்த மொடல் 2009-ஆம் ஆண்டு வரை விற்பனைக்கு வெளியாகவில்லை.
பின்னர் இந்த மொடல் ஷூவை லிமிட்டட் எடிஷனாக வெளியிடப்பட்டு, ஒரு ஜோடி ஷூ 2000 முதல் 4000 டொலர் வரை விற்பனையானது. இந்த Yeezy மொடல் மூலம் கடந்த 2020 வரை Nike நிறுவனம் 1.7 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியது.
ஆனால், கன்யே வெஸ்ட் அணிந்த இந்த ஒரே ஒரு ஜோடி கருப்பு நிற Yeezy 1s ஸ்னீக்கர் ஷூ 1.8 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஏலம் ஒரு வரலாற்றையும் படைத்துள்ளது. அது என்னவென்றால், இதற்கு முன்னர் ஒரு காலணி இவ்வளவு மதிப்பிற்கு விலை போனதில்லை.
இதற்கு முன்பாக 2020 ஆகஸ்ட் மாதம் Nike Air Jordan 1s மொடல் ஷூ ஒன்று 615,000 டொலருக்கு Christie's auction-ல் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.