7 மில்லியன் டொலர் ராணுவ அயுதங்கள்... தாலிபான்களிடம் விட்டு சென்ற அமெரிக்கா
- 2021ம் ஆண்டு படைகளை திருப்பி எடுத்துகொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு.
- 20 ஆண்டுகளுக்கு பிறகு, தாலிபான்கள் காபுலில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினர்.
- ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா 7 மில்லியன் டொலர் மதிபுள்ள ராணுவ உபகரணங்களை விட்டு சென்று இருப்பதாக தகவல்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதை தொடர்ந்து, சுமார் 7 மில்லியன் டொலர் மதிப்பில் உள்ள ராணுவ உபகரணங்களை அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலேயே விட்டு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவை அழிப்பதற்க்காக அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகள் இணைந்து ஆப்கானிஸ்தானில் தங்களது ராணுவ நடவடிக்கைகளை அறிவித்தது.
இதன் அடிப்படையில், கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை இழந்த தாலிபான்கள்(Taliban), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின்(Joe Biden) படை பின்வாங்கி கொள்ளும் அறிவிப்பை 2021ம் ஆண்டு தெரிவித்ததை தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அரசு எதிராக தாக்குதலை தொடர்ந்து தாலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு அகஸ்ட் 15ம் திகதி காபுலில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினர்.
அமெரிக்கப் படைகளின் அவசர அவசரமான இந்த வெளியேற்றத்தினால், திடிரென களைக்கப்பட்ட ஆட்சி, தாலிபான்கள் மீதான ஆப்கானிஸ்தான் மக்களின் பய உணர்வு, அதனால் அவசர அவசரமாக மக்கள் வெளியேற துடித்தது போன்ற அதிகபடியான பதற்றம் ஆப்கானிஸ்தானில் வெடித்தது.
இந்த பதற்றம் தற்போது ஒரளவிற்கு தணிந்து இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய அமெரிக்க படைகள் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ராணுவ உபகரணங்களை விட்டு சென்று இருப்பதாக காங்கிரஸ் அமைப்பி்ற்க்காக தயாரிக்கபட்ட அறிக்கையின் முலம் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில், கிட்டதட்ட 78 அமெரிக்க போர் விமானங்கள் 40,000 முதல் 1,00,000 எண்ணிக்கையிலான ராணுவ வாகனங்கள், 3,00,000 முதல் 4,27,300 எண்ணிக்கையிலான போர் ஆயுதங்கள், மற்றும் 42,000 என்ற எண்ணிக்கையிலான இரவு பார்வை, கண்காணிப்பு, 'பயோமெட்ரிக் மற்றும் பொருத்துதல் உபகரணங்கள் போன்றவற்றை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் அமெரிக்க படைகள் விட்டு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அமெரிக்க படைகள் விட்டு சென்ற ராணுவ ஆயுதங்கள், போர் விமானங்கள், வாகனங்கள் அகியவற்றை தாலிபான்கள் கைப்பற்றியது போன்ற புகைபடங்கள் வெளிவந்த போது அவை பெரும் சர்ச்சையை உலகநாடுகள் மத்தியில் கிளப்பியது.
இது குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ள அனைத்து ஆயுதங்களும் செயல் இழக்க செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவற்றில் பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை தலிபான்கள் பயன்படுவது தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் இருப்பது குறிப்பிடதக்கது.