ஆசிய நாடொன்றின் உயர் ரக ஹொட்டல்களில் அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதித்த அமெரிக்கா
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள உயர் ரக ஹொட்டல்களில் அரசு அதிகாரிகள் வருகை தருவதை அமெரிக்கா தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.
அச்சுறுத்தல் இருப்பதாக
அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த அறிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் உள்ள உயர் ரக ஹொட்டல்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கராச்சி அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்தது என்று பாதுகாப்பு எச்சரிக்கையில் அந்தத் துறை தெரிவித்துள்ளது.
கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், இந்த ஹொட்டல்களுக்கு அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் வருகையை தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சில சமயங்களில் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா தலங்கள், ஹொட்டல்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பகுதிகளை உத்தியோகப்பூர்வ அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கு தடை செய்வதாக வெளிவிவகாரத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க குடிமக்கள்
மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்கள் அடிக்கடி வரும் இடங்களில் மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அதிகமாக புழங்காமல் இருக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு எச்சரிக்கை வலியுறுத்துகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, அமெரிக்க குடிமக்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறும் வெளிவிவகாரத்துறை தற்போது அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |