இந்தியாவின் எரிவாயு தேவைக்காகவே... ஹார்முஸ் தாக்குதலுக்கு புது விளக்கமளித்த அமெரிக்கா
ஹார்முஸ் நீரிணை ஊடாக கப்பல்களை விடுவிப்பதன் பின்னணி மனிதாபிமான செயற்பாடு மட்டுமே எனவும், குறிப்பாக இந்தியாவின் எரிவாயு நெருக்கடியைப் போக்கவே என்றும் அமெரிக்கா புதிய விளக்கமளித்துள்ளது.
நடவடிக்கை எடுக்க
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய பெசென்ட், கடந்த மாதம் நடைபெற்ற உலக வங்கியின் வசந்தகாலக் கூட்டங்களின் போது, பல நாடுகள் குறிப்பாக மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் தலைவர்கள் தம்மை அணுகி கோரிக்கை வைத்ததாகவும்,
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பில்லியனுக்கும் அதிகமான
இது வெறும் மனிதாபிமான முயற்சி என தெரிவித்துள்ள அவர், இங்கிருந்து செல்லும் எரிவாயுவால் இந்தியாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்றார்.

போரில் ஈரான் தனது போரிடும் திறனை இழந்துவிட்டது என்ற கூற்றை பெசென்ட் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஈரானின் தற்காப்பு என்பது வெறும் வாய்ச்சவடால் என்றும் அவர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |