5,800 டொலர் மதிப்புள்ள விஸ்கி போத்தலைக் காணவில்லை! தேடிவரும் அமெரிக்க அரசாங்கம்
முன்னாள் வெளியுறவு அமைச்சருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட 7,800 டொலர் மதிப்புள்ள விஸ்கி போத்தலைக் காணவில்லை என அமெரிக்க அரசாங்கம் தேடிவருகிறது.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோவுக்கு (Mike Pompeo) பரிசாக வந்த 7,800 டொலர் மதிப்புள்ள விஸ்கி போத்தலைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்துத் தற்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொம்பேயோ சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஜப்பானிய அதிகாரிகள் அந்தப் பரிசைத் தந்ததாக அமெரிக்க அரசாங்கக் கோப்புகள் காட்டுகின்றன.
ஆனால் அந்தப் பரிசு பொம்பேயோவுக்குப் போய்ச் சேர்ந்ததா இல்லையா என்று தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்க அதிகாரிகள் 390 டொலருக்கும் குறைவான மதிப்புள்ள பரிசுகளை வைத்திருக்கலாம். அந்த விலைக்கு மேல் உள்ள பரிசுகளை வைத்திருக்க விரும்பினால் அவற்றைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.
விஸ்கி போத்தலைப் பெற்றதற்கான எந்த ஒரு நினைவும் தமக்கு இல்லை என்று பொம்பேயோ அவரது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசமைப்புச் சட்டப்படி ஒரு அமெரிக்க அதிகாரி வெளிநாட்டு அரசாங்கங்களிடம் இருந்து பரிசுகள் பெறுவது சட்டவிரோதமானது. அவ்வகைப் பரிசுகள் அமெரிக்க அரசாங்கத்தின் சொத்தாகக் கருதப்படுகின்றன. அதனை மீறி பரிசுகளை ஏற்றுக்கொள்ளும் அதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன.
ஜப்பானியர்கள் பாம்பியோவுக்கு என்ன மாதிரியான விஸ்கி போத்தலைக் கொடுத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பெரும்பாலான ஜப்பானிய விஸ்கிகள் அயர்லாந்து, ஸ்காட்லாந்து அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதைப் போலவே சுவையாக இருக்கின்றன. ஆனால், முந்தைய நாட்களில் தாயாரித்த ஜப்பானிய விஸ்கிகளுக்கான விலைகள் சமீப ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான டொலர்கள் வரை அதிகமாக உயர்ந்துள்ளன.