அமெரிக்காவில் வெடித்த சரக்கு விமானம்! வெளியான பலியானோர் எண்ணிக்கை
அமெரிக்காவின் லூயிஸ்வில் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 7 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் லூயிஸ்வில் விமான நிலையத்தில் விபத்து
செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்காவின் லூயிஸ்வில்(Louisville), கென்டக்கி(Kentucky) மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் UPS சரக்கு விமானம் ஆனது விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தில் குறைந்தது 7 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அப்பகுதி மாகாண ஆளுநர் ஆண்டி பெஷியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணிக்கு புறப்பட்ட The MD-11 என்ற விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவத்தின் போது பெரும் வெடிப்பு வானில் அடர்த்தியாக கருப்பு புகையை பரவியதை பார்க்க முடிகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 3 பேர் பணியாளர்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இதில் குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலர் தீவிரமான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |