அமெரிக்காவில் குழந்தைகளை சீண்டிய அரக்கன்: 690 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அமெரிக்காவில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்து கொண்டு அரக்கத்தனமாக வேலை பார்த்த நபருக்கு சுமார் 690 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பராமரிப்பாளரின் பயங்கர முகம்
அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தின் கோஸ்டா மேஸா என்ற பகுதியை சேர்ந்த மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி என்ற நபர் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பணியை செய்து வருகிறார்.
அசல் குழந்தை பராமரிப்பாளர் என்ற விளம்பர படுத்திக் கொண்ட மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி அமெரிக்க பெற்றோர்கள் தேடும் நபராக உருவெடுத்தார்.
Matthew Zakrzewski
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் லகுனா பீச் பகுதியை சேர்ந்த பெற்றோர் ஒருவரின் குழந்தையை பராமரிக்கும் பணியை செய்துள்ளார்.
அப்போது மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி தங்கள் குழந்தையை தகாத உறவில் ஈடுபட வைக்க முயன்றதாக குழந்தையின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணையில் தெரிய வந்த பயங்கரம்
இதையடுத்து விசாரணையை தொடங்கிய பொலிஸார் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி இதற்கு முன் பணியாற்றிய அனைவரிடமும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
abc7
அப்போது தான் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி லாஸ் ஏஞ்சலில் மற்றொரு 7 வயது சிறுவனிடமும், தெற்கு கலிபோர்னியாவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளிடமும் இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
690 ஆண்டுகள் சிறை
மேலும் 2014 முதல் 2019 வரை மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி மொத்தம் 16 குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. சாட்சியங்கள் அழித்த புகார் மற்றும் விவரங்களின் அடிப்படையில் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி-ன் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு குறைந்தபட்சமாக அவருக்கு 690 ஆண்டுகள் மேல் சிறை தண்டனை விதிக்கப்பட இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |