ஐஸ் பெட்டியில் ஒட்டிக் கொண்டு புயல் வீசிய கடலில் உயிர் தப்பிய நபர்! சவாலான மீட்பு வீடியோ
ஐஸ் பெட்டி ஒட்டிக் கொண்டு கடலில் தத்தளித்த நபரை அமெரிக்க கடலோர காவல் படையின் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஐஸ் பெட்டியில் ஒட்டிக் கொண்டு உயிர் பிழைத்த நபர்
கடற்கரையில் 30 மைல் தூரத்தில் ஐஸ் பெட்டியின் மீது ஒட்டிக் கொண்டு உயிருக்காக போராடிய நபரை அமெரிக்க கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடலில் தத்தளித்த நபர் பயணித்த கப்பல் மெக்சிகோ வளைகுடா பகுதியில் பாதிப்புக்கு உள்ளானதை அடுத்து அவர் இந்த ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்.
??We reported overnight that a man who was left clinging to a cool box floating 30 miles offshore has been rescued by the US Coast Guard#news #sky #hurricaneMilton pic.twitter.com/5Iqly03Kka
— Adrian (@Adixon18pz) October 11, 2024
கடலில் ஐஸ் பெட்டியுடன் மிதந்து கொண்டு உயிருக்காக போராடிய நபரை அமெரிக்க கடலோர காவல் படையினர் மீட்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட நபர் தற்போது சிகிச்சைக்காக தம்பா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கடலோர காவல்படையினர் ஆச்சரியம்
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க கடலோர காவல் படையின் லெப்டினன்ட் கமாண்டர் Dana Grady தெரிவித்த கருத்தில், “இந்த மனிதன் உயிர் பிழைத்தது என்பது அனுபவம் வாய்ந்த கடற்படையினருக்கு கூட மோசமான கனவு காட்சி” தான் என குறிப்பிட்டுள்ளார்.
“கடலில் நிலவிய சூறாவளி நிலைமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர் கடலில் தத்தளித்த போது சுமார் 75-90 மைல் வேகத்தில் காற்று மற்றும் 20 முதல் 25 அடியில் அலைகளை அனுபவித்து உயிர் தப்பி இருக்க வேண்டும் என்று மதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |