கடலில் 5 மணிநேர உயிர் போராட்டம்: நீர் நாயிடம் கவிதை பாடிய விநோத சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் தாம்ப்ஸன் 5 மணி நேரமாக கடலில் தவறி விழுந்து தத்தளித்த நிலையில் அவரின் உயிரை கடல் நீர் நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ஸ்காட் தாம்ப்ஸன் என்ற நபர் சாண்டா பார்பரா துறைமுக சேனலில் சென்று கொண்டிருக்கும் போது கடலில் தவறி விழுந்துள்ளார்.
அதிஷ்டவசமாக படகின் மோட்டார் பிளேடுகளில் இருந்து விலகி சென்று உயிர் பிழைத்த நிலையில், கடுமையான மிக குளிர்ந்த பசிபிக் கடலிடம் ஸ்காட் தாம்ப்ஸன் சிக்கிக்கொண்டுள்ளார்.
தன்னிடம் இருந்து விலகி சென்ற படகை நீந்தி சென்று அடைந்து விடலாம் என்ற அவரது முயற்சி தோல்வியில் முடியவே தான் இறந்துவிடுவோம் என்ற பயத்தின் உச்சத்தில் கண்ணீர் விட்டு கவலையில் முழ்கியுள்ளார்.
உறைபனிக்கு சற்று மேலே இருந்த அந்த கடல் நீரில் ஒரு மெல்லிய டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து அவர் தத்தளித்தபோது திடீரென தண்ணிரை பீச்சியடிக்கும் ஒரு பெரிய சத்தம் கேட்கவே அதை சுறா மீன் தான் என்ற கூடுதல் பீதியை அவருக்கு ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் திடீரென அவர் முன் ஒரு கடல் நீர் நாய் தோன்றி அவரை உற்று பார்த்துவிட்டு மீண்டும் நீருக்குள் சென்றுள்ளது.
நீருக்குள் சென்ற அந்த நீர் நாய் அவரின் பின்பக்கம் மோதி அவரை நீரில் மூழ்காமல் பார்த்துக்கொண்டு இருந்தது, தொடர்ந்து 5 மணிநேரமாக அந்த குளிர்ந்த நீரில் அந்த பாசமான நீர் நாயுடன் பொழுதை கழித்த ஸ்காட் தாம்ப்ஸன் அதற்காக டெட் பாடல்கள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு சொல்லும் நகைச்சுவை ஆகியவற்றை அந்த கடல் நீர் நாயிடம் கூறி ஆறுதல் அடைந்துள்ளார்.
கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு பிறகு அருகில் உள்ள சிறிய எண்ணெய் தளத்திற்கு நீந்தி சென்றுள்ளார் பின் அவர் கடற்படையால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்காட் தாம்ப்ஸன் பேசுகையில், மனிதர்களின் சக்திக்கு மேல் ஒரு மிக பெரிய சக்தி இருப்பதை இந்த நிகழ்வின் மூலம் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.