கூகுள் மேப் காட்டிய வழியை நம்பிச் சென்று உடைந்த பாலத்திலிருந்து காருடன் விழுந்து உயிரிழந்த நபர்
அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய பாதையை பின்பற்றி உடைந்த பாலத்தின் வழியாக காரில் சென்ற நபர் உயிரிழந்ததை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கூகுள் மேப்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நபர் ஒருவர் உடைந்த பாலம் வழியாக தன்னுடைய காரில் சென்று போது கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவர் கூகுள் மேப் காட்டிய வழியை பின் தொடர்ந்து உடைந்த பாலத்தில் பயணத்து பாலத்தின் விளம்பில் இருந்து 20 அடி உயர பள்ளத்தில் இருந்து காருடன் விழுந்து உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட பாலம் சேதமடைந்து ஓராண்டுக்கு மேலாக ஆவதாக மக்கள் பலர் புகார் அளித்தும் கூகுள் நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய கூகுள் மேப் சேவைக்கு அந்த பாதையை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
வழக்கு பதிவு
இந்நிலையில் பாலத்தில் இருந்து காருடன் விழுந்து உயிரிழந்தவரின் மனைவி கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் உடைந்த பாலம் குறித்து பலமுறை புகார் அளித்தும், கூகுள் நிறுவனம் தங்களது கூகுள் மேப் சேவையில் அதனை அப்டேட் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய கணவனின் உயிரிழப்பிற்கு பிறகும், அந்த உடைந்த பாலத்தின் வழியாக கூகுள் மேப் வழி காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட புகார் குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |